நாகை புதிய கடற்கரையில் ஆடிப்பெருக்கையொட்டி பெண்கள் சிறப்பு வழிபாடு


நாகை புதிய கடற்கரையில் ஆடிப்பெருக்கையொட்டி பெண்கள் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 4 Aug 2017 4:00 AM IST (Updated: 4 Aug 2017 1:36 AM IST)
t-max-icont-min-icon

நாகை புதிய கடற்கரையில் ஆடிப்பெருக்கையொட்டி பெண்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகையில் பல்வேறு இடங்களில் நேற்று ஆடிப்பெருக்கையொட்டி பெண்கள் சிறப்பு சுமங்கலி பூஜை செய்தனர். இந்தநிலையில் நாகை புதிய கடற்கரையில் திரளான பெண்கள் ஒன்று கூடி சுமங்கலி பூஜை செய்தனர். அப்போது தங்கள் கணவன்மார்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்று ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறை கழுத்தில் கட்டி கொண்டனர். மேலும் பெண்கள் வாழை இலை போட்டு விளக்கேற்றி புது மஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள், புது துணி, பனை ஓலையில் செய்யப்பட்ட காதோலை, கருகமணிமாலை, படையல் அரிசி, வெல்லம், பழங்கள் ஆகியவற்றை வைத்து வழிபட்டனர். பின்னர் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜை செய்தனர். அதேபோல் காமேஸ்வரம் கடற்கரையில் திரளான பெண்கள் ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு வழிபாடு செய்தனர்.

குழாய் அடியில்...

மேலும் பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான பெண்கள் வீட்டில் குழாய் அடியிலும், பாத்திரங்களில் தண்ணீர் பிடித்து வைத்தும் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பருவமழை கைவிட்டதாலும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படாததாலும் பொதுமக்கள் குழாய் அடிகளில் ஆடிப்பெருக்கை கொண்டாடி வருகின்றனர்.


Related Tags :
Next Story