திருச்சுழி அருகே குடிநீர்கேட்டு மறியல்


திருச்சுழி அருகே குடிநீர்கேட்டு மறியல்
x
தினத்தந்தி 4 Aug 2017 4:15 AM IST (Updated: 4 Aug 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

திருச்சுழி அருகே குடிநீர்கேட்டு மறியல்

திருச்சுழி,

திருச்சுழி அருகே உள்ள சித்தலகுண்டு கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை தீர்க்கக்கோரி அருப்புக்கோட்டையிலிருந்து ராமேசுவரம் செல்லும் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சுழி சப்-இன்ஸ்பெக்டர் அசோகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி ஆகியோர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கூடுதலாக குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பின்பு அனைவரும் கலைந்து சென்றனர். 

Related Tags :
Next Story