ஆடிப்பெருக்கையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்


ஆடிப்பெருக்கையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்
x
தினத்தந்தி 4 Aug 2017 4:30 AM IST (Updated: 4 Aug 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

மும்பை,

மும்பையில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆடிப்பெருக்கு

ஆடி மாதம் பிறந்தது முதல் மும்பையில் தமிழர்கள் நிர்வகித்து வரும் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. பக்தர்கள் அம்மனுக்கு கூழ் படைத்து வழிபாடு நடத்தினார்கள். நேற்று அம்மன் கோவில்களில் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டது. இதையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. மும்பையில் உள்ள மகாலட்சுமி கோவிலுக்கு தமிழர்கள் ஏராளமானவர்கள் தங்களது குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

தாராவி கருமாரியம்மன் கோவில்

தாராவி தேவர் நகரில் உள்ள கருமாரி அம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.

இதையொட்டி கோவிலில் உள்ள கருமாரியம்மன் மற்றும் சந்தனமாரியம்மனுக்கு காலை 21 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பெண்களுக்கான சுமங்கலி பூஜை, சாமிக்கு அலங்கார பூஜை நடந்தது.

இதை தொடர்ந்து பெண்களுக்கு பிரசாதமாக வளையல், குங்குமம், மஞ்சள், தாலிக்கயிறு ஆகியவை வழங்கப்பட்டன.

பக்தர்கள் தரிசனம்

சயான் கோலிவாடா கருமாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தட்டாங்குட்டை மாரியம்மன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், தோபிகோட் பொது பூமாரியம்மன் கோவில்,

சமயபுரம் மாரியம்மன் கோவில், காட்கோபர் காமராஜ் நகரில் உள்ள ஸ்ரீதேவி முத்துமாரியம்மன் கோவில், மாட்டுங்கா கன்னிகா பரமேஷ்வரி அம்மன், தாராவி மகமாயி மாரியம்மன், ரேரோடு, செம்பூரில் உள்ள அம்மன் கோவில் உள்ளிட்ட தமிழர்கள் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story