7–ந்தேதி முதல் பெஸ்ட் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு


7–ந்தேதி முதல் பெஸ்ட் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு
x
தினத்தந்தி 5 Aug 2017 3:34 AM IST (Updated: 5 Aug 2017 3:34 AM IST)
t-max-icont-min-icon

7–ந்தேதி முதல் பெஸ்ட் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

மும்பை,

7–ந்தேதி முதல் பெஸ்ட் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

பெஸ்ட் ஊழியர்கள்

மும்பையில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெஸ்ட் குழுமம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ் சேவைகளை சுமார் 30 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். பெஸ்ட் பஸ்கள் நஷ்டத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பெஸ்ட் குழுமம் தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதிலும் திணறி வருகிறது. மாத சம்பளத்திற்காக பெஸ்ட் ஊழியர்கள் போராட்டத்திற்கும் தள்ளப்பட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில், குறிப்பிட்ட தேதியில் சம்பளத்தை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும், தனியார் பஸ்களை வாடகைக்கு இயக்கும் திட்டத்தை கைவிடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெஸ்ட் ஊழியர்கள் கடந்த 1–ந்தேதி முதல் வடலா பஸ் டெப்போவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

வேலை நிறுத்தம்

இந்தநிலையில் வருகிற 7–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளனர். இதுபற்றி பெஸ்ட் ஊழியர்கள் யூனியன் தலைவர் சஷாங் ராவ் கூறியதாவது:–

‘‘எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளோம். இதற்காக நாங்கள் மாநகராட்சி மற்றும் பெஸ்ட் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க 3 நாட்கள் அவகாசம் கொடுத்து இருக்கிறோம்.

அதற்குள் நல்ல முடிவு எடுக்காவிட்டால் அறிவித்தபடி 7–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். இந்த போராட்டத்தில் பெஸ்ட் ஊழியர்கள் 36 ஆயிரம் பேரும் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story