குடிநீர் சீராக வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
திருச்சி பீமநகர் பகுதியில் குடிநீரை சீராக வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சி,
திருச்சி மாநகராட்சி 48-வது வார்டான பீமநகர் முறுக்குகார தெரு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளில் உள்ள குழாய்களில் தற்போது நிலவும் தண்ணீர் பற்றாக்குறையால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் சீராக வருவதில்லை என்று கூறி காலிக்குடங்களுடன் அப்பகுதி பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை முறுக்குகார தெருவில் உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள், கடந்த ஒரு மாதமாக முறுக்குகார தெரு பகுதியில் சரியாக குடிநீர் வருவதில்லை. இதனால் விலை கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது குடிநீர் குறைவாக வரும் சூழ்நிலையில் முறுக்குகார தெருவுக்கு குடிநீர் வருவதற்கு பதிக்கப்பட்டுள்ள குழாய்களில் இருந்து பக்கத்து தெருவுக்கு குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்தும் மறியலில் ஈடுபட்டோம் என்றும், குடிநீரை சீராக வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆவேசத்துடன் கூறினர்.
இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி இளநிலை பொறியாளர் ராஜேஸ் கண்ணா சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் பொதுமக்களிடம், சீராக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாளை (திங்கட்கிழமை) இந்தப்பகுதியில் தண்ணீர் வரும்போது அதிகாரிகள் பார்வையிட்டு கூடுதலாக தண்ணீர் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், என்று கூறினார். அதனை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையடுத்து தற்காலிகமாக மாநகராட்சி லாரிகள் மூலமாக அந்தப்பகுதிக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டது. பொதுமக்களின் சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story