கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நிலுவைத்தொகை ரூ.30 கோடி வழங்கக்கோரி நடந்தது
தஞ்சை அருகே சர்க்கரை ஆலை வளாகத்தில் நிலுவைத்தொகை ரூ.30 கோடி வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த குருங்குளத்தில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை வளாகத்தில் நேற்று கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் திருப்பதிவாண்டையார், செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கரும்புக் கான தமிழக அரசின் பரிந்துரை விலை கடந்த 2 ஆண்டாக வழங்காமல் நிலுவையில் உள்ளது. இந்த நிலுவைத் தொகையான ரூ.30 கோடியை உடனே வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் கரும்பு விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் கரும்பு விவசாய சங்க நிர்வாகிகள் கூறுகையில், “கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு வழங்க வேண்டிய ரூ.30 கோடி நிலுவைத்தொகையை தராமல் இழுத்தடிப்பதை கண்டிக்கிறோம். இந்த நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். வருகிற 15-ந்தேதிக்குள் நிலுவைத்தொகையை வழங்காவிட்டால் சுதந்திரதினமான வருகிற 15-ந்தேதி 30 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான கரும்பு விவசாயிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்”என்றனர்.

Related Tags :
Next Story