ஆடி 3-வது வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆடி 3-வது வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 6 Aug 2017 4:00 AM IST (Updated: 6 Aug 2017 1:20 AM IST)
t-max-icont-min-icon

ஆடி வெள்ளியை யொட்டி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங் களில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வி.கைகாட்டி,

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. ஆடி 3-வது வெள் ளியை யொட்டி இக் கோவிலில் உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு வழிபாடு மற்றும் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு வெற்றிலை பாக்கு, குங்குமம், தேங்காய், வாழைப்பழம் ஆகியவற்றை வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.

முன்னதாக அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், களபம், பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் வி.கைகாட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குத்து விளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

திருமானூர் அருகே உள்ள வைத்தியநாத சாமி கோவிலில் ஆடி 3-வது வெள்ளியை முன்னிட்டு மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், நாட்டில் அமைதி நிலவ வேண்டியும் அ.தி.மு.க. சார்பில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக வைத்தியநாதசாமி சமேத சுந்தராம்பிகை அம் பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடை பெற்றது. தொடர்ந்து, பெண் கள் அனைத்து நன்மைகளும் அடைய வேண்டி குத்துவிளக்கு பூஜை செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங் கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை யில் உள்ள வேதமாரியம்மன் கோவிலில் ஆடி 3-வது வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். முன்னதாக கோவில் வளாகத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து வேதமாரி யம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பன்னீர் உள் ளிட்ட 16 வகை யான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் எடுத்து வந்த பால்குடம் மூலம் வேத மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் நடை பெற்றது. பின்னர் அம்மனுக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப் பட்டு தீபாராதனை காண்பிக் கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Related Tags :
Next Story