டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2 ஏ தேர்வு: நெல்லை மாவட்டத்தில் 24,988 பேர் எழுதினார்கள்
டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2 ஏ தேர்வை நெல்லை மாவட்டத்தில் 24 ஆயிரத்து 988 பேர் எழுதினார்கள்.
நெல்லை,
தமிழக அரசு துறையில் காலியாக உள்ள பணிக்கு டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2 ஏ தேர்வு மூலம் தேர்வு செய்து பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இந்த தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது. நெல்லை மாவட்டத்தில் தேர்வுக்கு 33 ஆயிரத்து 390 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
நெல்லையில் 10 மையங்களும், அம்பையில் 12 மையங்களும், பாளையங்கோட்டையில் 29 மையங்களும், சங்கரன்கோவிலில் 20 மையங்களிலும், தென்காசியில் 26 மையங்களும், வள்ளியூரில் 8 மையங்களும் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வை கண்காணிக்க 22 நடமாடும் குழுக்கள், 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
தேர்வு நேற்று காலை நடந்தது. சேரன்மாதேவி கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த மையங்களை கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் உடன் சென்று இருந்தனர். கண்காணிப்பு குழுக்களை சேர்ந்தவர்களும் ஆய்வு செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 8 ஆயிரத்து 402 பேர் தேர்வு எழுத வரவில்லை. 24 ஆயிரத்து 988 பேர் தேர்வு எழுதினார்கள். தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட நிர்வாகம் செய்து இருந்தது.

Related Tags :
Next Story