ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறக்கோரி கதிராமங்கலம் கிராம மக்கள் நூதன போராட்டம்


ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறக்கோரி கதிராமங்கலம் கிராம மக்கள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 7 Aug 2017 4:30 AM IST (Updated: 7 Aug 2017 1:32 AM IST)
t-max-icont-min-icon

கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறக்கோரி கிராம மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நீதி தேவதையை போல் வேடமணிந்த மாணவியிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

திருவாலங்காடு,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறுகளை அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய கிராம மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதுதொடர்பாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களை விடுதலை செய்யக்கோரியும், கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறக்கோரியும் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கதிராமங்கலத்தில் உள்ள அய்யனார் கோவில் வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று 26-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது.

இதில் மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் ஆசைத்தம்பி கலந்து கொண்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். நேற்று கதிராமங்கலம் கிராம மக்கள் நீதி தேவதையிடம் மனு அளிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நீதி தேவதை போல் வேடமணிந்த பள்ளி மாணவி ஒருவரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். 

Related Tags :
Next Story