தமிழகத்தில் நக்சலைட்டுகள் இல்லை முன்னாள் டி.ஜி.பி. தேவாரம் பேச்சு
தமிழகத்தில் தற்போது நக்சலைட்டுகள் இல்லை என்று முன்னாள் டி.ஜி.பி. தேவாரம் கூறினார்.
திருப்பத்தூர்,
கடந்த 1980-ம் ஆண்டு திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை பகுதிகளில் நக்சலைட்டுகள் வேட்டையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது நடந்த தாக்குதலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி, ஏட்டு ஆதிகேசவலு, போலீஸ்காரர்கள் முருகேசன், ஏசுதாஸ் ஆகிய 4 பேர் நக்சலைட்டுகளால் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து அவர்களின் நினைவாக திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் நினைவு தூண் ஒன்று நிறுவப்பட்டது. கடந்த ஆண்டு அந்த நினைவு தூணை மண்டபம் போன்று புதிதாக கட்டி திருப்பத்தூர் போலீசார் புதுப்பித்தனர்.
தாக்குதலில் உயிரிழந்த தினமான ஆகஸ்டு 6-ந் தேதியை வீரவணக்க நாளாக திருப்பத்தூர், ஜோலார்பேட்டை போலீசார் மற்றும் பொதுமக்கள் அனுசரித்து வருகின்றனர்.
அதன்படி, நேற்று திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் உள்ள நினைவு தூண் முன்பு 37-ம் ஆண்டு வீரவணக்க அனுசரிப்பு நடந்தது. இதில் ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி.தேவாரம், அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்ட கலெக்டர் ராமன், ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த நினைவு தூணில் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செய்து, அஞ்சலி செலுத்தினர். அப்போது 21 குண்டுகள் முழங்க வீரவணக்கம் அனுசரிக்கப்பட்டது.
பின்னர் ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி. தேவாரம் பேசியதாவது:-
நக்சலைட்டுகள் இல்லை
1981-ம் ஆண்டு இந்த வீரவணக்க நாளை அனுசரிக்கும்போது நாங்கள் மட்டும் தான் இருந்தோம். அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமானவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீரவணக்கத்தை அனுசரித்து வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் பொதுமக்களின் ஒத்துழைப்பு தான்.
நக்சலைட்டுகளால் உயிரிழந்தவர்களுக்கு வீரவணக்கம் அனுசரிப்பது இங்கு மட்டும் தான். வேறு எங்கும் கிடையாது. தமிழகத்தில் தற்போது நக்சலைட்டுகள் இல்லை. ஜார்கண்ட், சட்டீஸ்கர், தெலுங்கானா மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் இன்றும் நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் விழிப்புணர்வுடன் இருப்பதால், நக்சலைட்டுகளை ஒழிக்க முடிந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
மலர் வளையம் வைத்து அஞ்சலி
நிகழ்ச்சியில் வடக்கு மண்டல ஐ.ஜி. சி.ஸ்ரீதர், வேலூர் சரக டி.ஐ.ஜி. வி.வனிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.பகலவன், கியூ பிரிவு போலீஸ் சூப்பிரண்டு வி.விக்ரமன், ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு எம்.அசோக்குமார், திருப்பத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், போலீஸ் அதிகாரிகள், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள், பல்வேறு துறை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மலர் வளையம், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Related Tags :
Next Story