ரெயில் பயணிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது


ரெயில் பயணிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
x
தினத்தந்தி 7 Aug 2017 4:15 AM IST (Updated: 7 Aug 2017 1:51 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் ரெயில் பயணிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

அரக்கோணம்,

அரக்கோணம் ரெயில் நிலையம் முன்பாக ரெயில் பயணிகள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ரெயில் பயணிகள் சங்க தலைவர் நைனா மாசிலாமணி தலைமை தாங்கினார். எஸ்.முனிபிரசாத், ஜெ.ஷாநவாஸ், ஜி.டி.என்.அசோகன், துரை ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் ஜெ.கே.ரகுநாதன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வேலூர் மாவட்ட தலைவர் கே.எம்.தேவராஜ், அனைத்து ரெயில் பயணிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எம்.மூர்த்தி, ஏ.சிவசுப்பிரமணியராஜா, வீரராகவன், க.கவுதம், ஜெயராஜ், ஏ.பி.எம்.சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், அரக்கோணம் - தக்கோலம் அகல ரெயில் பாதையில் மின்மயமாக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். அரக்கோணம் ரெயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் அதிவிரைவு ரெயில்கள் நின்று செல்ல வேண்டும்.

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில் இயக்க வேண்டும். சேலத்தில் இருந்து காட்பாடி வரை இயக்கப்பட்டு வரும் மின்சார ரெயிலை அரக்கோணம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதில் ரெயில் பயணிகள் சங்க நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் எம்.சிவக்குமார் நன்றி கூறினார். 

Next Story