குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
மதுரை மேற்கு ஒன்றியம் விட்டன்குளத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
வாடிப்பட்டி,
மதுரை மேற்கு ஒன்றியம் சமயநல்லூர் அருகே உள்ள வைரவநத்தம் ஊராட்சிக்குட்பட்ட விட்டன்குளத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வந்தனர். அவர்கள் இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் பலமுறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். அதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை மது–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தோடனேரி பிரிவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மதுரை மேற்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன், சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) முருகேஷ் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் குடிநீர் முறைப்படி வினியோகம் செய்யப்படும் என்று கூறியதை தொடர்ந்து சாலை மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story