குடிசை வீட்டில் தீ விபத்து பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஆறுதல்


குடிசை வீட்டில் தீ விபத்து பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஆறுதல்
x
தினத்தந்தி 8 Aug 2017 4:00 AM IST (Updated: 8 Aug 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

கலசபாக்கம் அருகே குடிசை வீட்டில் தீ விபத்து பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஆறுதல்

கலசபாக்கம்,

கலசபாக்கத்தை அடுத்த காப்பலூர் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 40), விவசாயி. இவரது மனைவி ரங்கபுரி. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். ராஜேந்திரன் குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு மழை பெய்ததால் அவர்கள் பக்கத்து வீட்டில் படுத்து தூங்கினர். ராஜேந்திரன் அதிகாலையில் எழுந்து குடிசை வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் கியாஸ் கசிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மின் விளக்கின் சுவிட்சை போட்டு உள்ளார். அப்போது வீடு முழுவதும் கியாஸ் பரவி இருந்ததால் தீ விபத்து ஏற்பட்டு குடிசை வீடு எரிந்து நாசமானது. இதில் ராஜேந்திரன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. நேரில் சென்று தீ விபத்து ஏற்பட்ட வீட்டை பார்வையிட்டார். பின்னர் ராஜேந்திரன் மனைவி ரங்கபுரியிடம் ஆறுதல் கூறினார். இதனையடுத்து அரசு சார்பில் ரூ.5 ஆயிரம், அரிசி, மளிகை பொருட்கள், வேட்டி, சேலை ஆகியவற்றை வழங்கினார். அப்போது தாசில்தார் மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். 

Related Tags :
Next Story