ராமேசுவரத்தில் இருந்து பைசாபாத்துக்கு தஞ்சை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வரவேற்பு
ராமேசுவரத்தில் இருந்து பைசாபாத்துக்கு தஞ்சை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர்,
ராமேசுவரத்தில் இருந்து அயோத்தி வழியாக பைசாபாத் நகருக்கு புதிய வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்படி இந்த ரெயில் நேற்று முன்தினம் இரவு ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு மானாமதுரை, திருச்சி வழியாக நேற்று காலை தஞ்சைக்கு வந்தது.
தஞ்சை ரெயில் நிலையத்தில் ரெயிலுக்கு தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் பரசுராமன் எம்.பி. சார்பில் ரெயில்வே நிலைக்குழு உறுப்பினர் ஜெயராமன் தலைமையில் தஞ்சை பயணிகள் நல சங்க தலைவர் கண்ணன், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் சத்தியமூர்த்தி, ரெயில் உபயோகிப்பாளர் சங்க தலைவர் அயனாபுரம் நடராஜன், சட்ட ஆலோசகர் வக்கீல் ஜீவக்குமார், மூத்த குடிமக்கள் பேரவை தலைவர் ஆதி நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இனிப்புகள் வழங்கினர்
அப்போது தஞ்சை ரெயில் நிலைய மேலாளர், ரெயில் என்ஜின் டிரைவர் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தினர். பின்னர் அங்கிருந்த ரெயில் பயணிகளுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கோவி.மனோகரன், அருள்சகாயகுமார், அ.தி.மு.க. நிர்வாகிகள் பாஸ்கரன், பருத்திக்கோட்டை ஜெயராமன், வார்டு செயலாளர் ராஜா, தொலைபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர் ராஜ்மோகன், காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவன மேலாண்மை இயக்குனர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ரெயில் ஞாயிற்றுக் கிழமை தோறும் இரவு 11.50 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு மானாமதுரை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், விழுப்புரம், சென்னை எழும்பூர், விஜயபாரா, வாராங்கல், நாக்கூர், ஜபல்பூர், அலகாபாத், ஜன்பூர், அயோத்தி வழியாக பைசாபாத் நகரை புதன்கிழமை காலை 8.30 மணிக்கு சென்றடைகிறது. பைசாபாத்தில் இருந்து இந்த ரெயில் புதன் கிழமை இரவு புறப்பட்டு தஞ்சைக்கு சனிக்கிழமை காலை வந்து ராமேசுவரம் சென்றடைகிறது.

Related Tags :
Next Story