அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் கைத்தறி துணிகளை பயன்படுத்த ஆணை பிறப்பிக்க வேண்டும்


அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் கைத்தறி துணிகளை பயன்படுத்த ஆணை பிறப்பிக்க வேண்டும்
x
தினத்தந்தி 8 Aug 2017 4:15 AM IST (Updated: 8 Aug 2017 2:35 AM IST)
t-max-icont-min-icon

அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் கைத்தறி துணிகளை பயன்படுத்த ஆணை பிறப்பிக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூர்,

தேசிய கைத்தறி தினத்தையொட்டி கரூர் மாவட்ட கைத்தறி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் சின்ன கொங்கு திருமண மண்டபத்தில் நேற்று கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். துணை தலைவர் கண்ணையன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சரக்கு, சேவை வரியில் இருந்து கைத்தறிக்கு விலக்கு அளித்த போதும் கைத்தறி உற்பத்திக்கு தேவையான சிட்டா நூல் வாங்கும் போதும், உற்பத்தி செய்து துணியாக விற்பனை செய்யும் போதும் சரக்கு, சேவை வரி செலுத்தப்படுகிறது. இதனால் கைத்தறி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கைத்தறிக்கு சரக்கு, சேவை வரி இல்லை என்பதை மத்திய, மாநில அரசுகள் தெளிவுபடுத்தி முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும்.

கைத்தறி துணிகள்

கூட்டுறவு சங்கங்களில் நெசவு செய்யும் கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கி வரும் ஓய்வூதியத்தை ரூ.ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்த வேண்டும். கைத்தறி ரகங்களுக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்கி குறிப்பிட்ட ரகங்களை கைத்தறியில் மட்டுமே உற்பத்தி செய்ய சட்டம் இயற்ற வேண்டும். அரசு அலுவலகங்கள், மருத்துவமனை, ரெயில்வே மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் கைத்தறி துணிகளை பயன்படுத்த அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் செயலாளர் ரத்தினம், துணை செயலாளர் சரவணன், நிர்வாகிகள் தங்கராசு, ரமேஷ், செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம்

முன்னதாக தேசிய கைத்தறி தினத்தையொட்டி சங்கத்தின் சார்பில் ஊர்வலம் நடந்தது. கரூர் நகராட்சி பூங்காவில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. ஜவகர் பஜார் வழியாக சென்று மண்டபத்தை அடைந்தது. இதில் பெண்கள், கைத்தறி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story