முள்ளக்காட்டில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு
தூத்துக்குடி அருகே முன்விரோதத்தில், தனியார் நிறுவன மேற்பார்வையாளர் உள்பட 3 பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர். இது தொடர்பாக 10 பேரை போலீசார் தேடிவருகின்றனர். தனியார் நிறுவன மேற்பார்வையாளர் தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு ராஜூவ்நகர் 4–வது தெருவை சேர்ந்தவ
ஸ்பிக்நகர்,
தூத்துக்குடி அருகே முன்விரோதத்தில், தனியார் நிறுவன மேற்பார்வையாளர் உள்பட 3 பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர். இது தொடர்பாக 10 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
தனியார் நிறுவன மேற்பார்வையாளர்தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு ராஜூவ்நகர் 4–வது தெருவை சேர்ந்தவர் சவுந்தரபாண்டி. இவருடைய மகன் சிவசந்திரன் (வயது 22). இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர், விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று ராஜூவ் நகர் 7–வது தெருவில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு, திரும்பி வந்தார். அப்போது அதே தெருவை சேர்ந்த இந்திரன் மற்றும் ஒருவர், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நின்று பேசிகொண்டிருந்தனர். இதனை அவர் கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து வைத்தனர்.
முன்விரோதம்பின்னர் வீடு திரும்பிய சிவசந்திரன் தனது நண்பர்களான மரியேந்திரன் (23), மிக்கேல் ராஜ்(28) ஆகியோருடன் சேர்ந்து மீண்டும் ராஜூவ் நகர் 7–வது தெருவிற்கு சென்றார். அங்கிருந்த இந்திரனிடம் அவர்கள் தகராறு செய்தனராம். அப்போது அந்த பகுதியில் இருந்த பெரியவர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
3பேருக்கு அரிவாள் வெட்டுஇந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த இந்திரன் சிறிது நேரத்தில், தனது நண்பர்களான இக்பால் உள்ளிட்ட 9 பேருடன் சிவசந்திரன் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பு நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த சிவசந்திரனை சுற்றி வளைத்து அவர்கள் அரிவாளால் வெட்டினர். அதனை தடுக்க முயன்ற மரியேந்திரன் மற்றும் மிக்கேல் ராஜ் ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் 3பேரும் கீழே விழுந்தனர். இந்திரன் உள்பட 10 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
10 பேருக்கு வலைவீச்சுஅக்கம் பக்கத்தினர் திரண்டு சென்று பலத்த காயங்களுடன் கிடந்த 3 பேரையும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாமகேசுவரன், சப்–இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இந்திரன், இக்பால் உள்ளிட்ட 10 பேரையும் தேடிவருகின்றனர்.