சாத்தூர் ராமச்சந்திரனின் 69–வது பிறந்த நாள் விழா ஏராளமானோர் வாழ்த்து


சாத்தூர் ராமச்சந்திரனின் 69–வது பிறந்த நாள் விழா ஏராளமானோர் வாழ்த்து
x
தினத்தந்தி 8 Aug 2017 10:15 PM GMT (Updated: 8 Aug 2017 7:21 PM GMT)

சாத்தூர் ராமச்சந்திரன் தனது 69–வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.

விருதுநகர்,

விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரனுக்கு நேற்று 69–வது பிறந்த நாள் ஆகும். அவரது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள இல்லத்தில் நேற்று காலை அவர் தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

அப்போது முன்னாள் அமைச்சரும், விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ, விருதுநகர் எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர். ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் விருதுநகர் தேசபந்துதிடலில் இருந்து சீர்வரிசை பொருட்களுடள் ஊர்வலமாக வந்து சாத்தூர் ராமச்சந்திரனுக்கு சால்வை அணிவித்தும், மாலை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தார்.

மாவட்டம் முழுவதும் இருந்து தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் அவரது இல்லத்துக்கு வந்து அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் சாத்தூர் ராமச்சந்திரனின் பிறந்தநாளை கொண்டாடினர்.


Next Story