மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்


மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
x
தினத்தந்தி 9 Aug 2017 4:00 AM IST (Updated: 9 Aug 2017 1:06 AM IST)
t-max-icont-min-icon

சென்னை செங்குன்றம் ரிங் ரோட்டை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மகன் ஆனந்த் (வயது 19). இவர் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வந்தார்.

ராயபுரம்,

கடந்த 6–ந் தேதி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த ஆனந்த் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதித்தனர்.

இதையடுத்து நேற்று காலை அறுவை சிகிச்சை மூலம் ஆனந்தின் உடலில் இருந்து இதயம், சிறுநீரகம், கல்லீரல், கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் பிரித்து எடுக்கப்பட்டன. பின்னர் போலீசார் உதவியுடன் இதயம் உடனடியாக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு 10 நிமிடத்தில் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த இதய நோயாளி ஒருவருக்கு பொருத்தப்பட்டது. கல்லீரல், ஒரு சிறுநீரகம் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கும், மற்றொரு சிறுநீரகம் ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரிக்கும், கண்கள் எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரிக்கும் தானமாக வழங்கப்பட்டது.


Next Story