திருக்கழுக்குன்றத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி திருட்டு


திருக்கழுக்குன்றத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி திருட்டு
x
தினத்தந்தி 8 Aug 2017 10:45 PM GMT (Updated: 8 Aug 2017 8:36 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகரை சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவரது மகன் தணிகாசலம் (வயது 39).

திருக்கழுக்குன்றம்,

இவர் திருக்கழுக்குன்றம் பஸ் நிலையம் அருகே செல்போன் கடை மற்றும் விடுதி நடத்தி வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் தத்தளுரில் உள்ள மாமியாரின் வீட்டுக்கு சென்று விட்டார்.

நேற்று முன்தினம் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் தங்கநகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளிப்பொருட்கள் மர்மநபர்களால் திருடப்பட்டிருந்தது.

இது குறித்து தணிகாசலம் அளித்த புகாரின்பேரில் திருக்கழுக்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர்.


Next Story