வரதராஜபெருமாள் கோவிலில் கருட சேவை திருவிழா


வரதராஜபெருமாள் கோவிலில் கருட சேவை திருவிழா
x
தினத்தந்தி 9 Aug 2017 4:15 AM IST (Updated: 9 Aug 2017 2:10 AM IST)
t-max-icont-min-icon

உலக பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் கருட சேவை திருவிழா நடந்தது.

காஞ்சீபுரம்,

இதையொட்டி கருட வாகனத்தில் வரதராஜபெருமாள் எழுந்தருளி மாட வீதிகளில் வீதியுலா வந்தார். மேலும் மேற்கு ராஜ கோபுரம் அருகே கஜேந்திர மோட்சம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாக உற்சவர் வரதராஜபெருமாளுக்கு கோவில் வளாகத்தில் திருமஞ்சனம் நடந்தது.

விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் விஜயன், அர்ச்சகர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story