திருவாரூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்


திருவாரூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2017 4:00 AM IST (Updated: 9 Aug 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் அப்பாசாமி முன்னிலை வகித்தார்.

இதில் வட்ட பொருளாளர் குணசேகரன், துணை தலைவர் காசிநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் தியாகராஜன், மகளிரணி நிர்வாகி சுபாசினி உள்பட பலர் கலந்து கொண்டனர். செங்கல்பட்டு துணை கலெக்டர் ஜெயசீலனின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

குடவாசல்

இதேபோல குடவாசல் தாசில்தார் அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். செயலாளர் லட்சுமணன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட துணை தலைவர் தெட்சிணாமூர்த்தி, இணைச்செயலாளர் ராசமாணிக்கம், வட்ட துணை தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.

நன்னிலம்

நன்னிலம் தாசில்தார் அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் வளர்மதி தலைமை தாங்கினார். செயலாளர் பசுபதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்திரன், வட்ட துணை தலைவர் எம்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில துணை தலைவர் முருகையன், மாவட்ட துணை தலைவர் விஜயகுமார் ஆகியோர் பேசினர். இதில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜசேகர், வட்ட செயலாளர் ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் டி.ராஜேந்திரன் நன்றி கூறினார்.

நீடாமங்கலம்

நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்ட செயலாளர் ராதா தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு பேசினார். இதில் வட்ட தலைவர் ராமன், முன்னாள் வட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கவுதமன், முருகையன், ஆறுமுகம், வீரமணி, சுமதி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார்.

மன்னார்குடி

வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் நேற்று மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். செயலாளர் வீரமணி, துணைச்செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வருவாய்த்துறை சங்க மாவட்ட தலைவர் மகேஷ், ஜெயபால் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். 

Next Story