மாற்று பணி வழங்க வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


மாற்று பணி வழங்க வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2017 4:30 AM IST (Updated: 9 Aug 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

மாற்று பணி வழங்க வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் திருவாரூரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி மாற்று பணி வழங்க வேண்டும். விற்பனை அடிப்படையில் ஊழியர்களை பணியமர்த்த வேண்டும். கடைகளுக்கு வரும் மதுபாட்டில்களுக்கு இறக்கு கூலியை முறைப்படுத்த வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் காலதாமதமின்றி பணி ஆணை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி திருவாரூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்துவேல் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் கலந்து கொண்டு பேசினார். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், மாவட்ட துணைத்தலைவர் பழனிவேல், மாவட்ட பொருளாளர் பாண்டியன், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story