கொன்னக்குழிவிளை வியத்தகு வியாகுல அன்னை ஆலய திருவிழா 11–ந் தேதி தொடங்குகிறது


கொன்னக்குழிவிளை வியத்தகு வியாகுல அன்னை ஆலய திருவிழா 11–ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 9 Aug 2017 4:00 AM IST (Updated: 9 Aug 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

கொன்னக்குழிவிளை வியத்தகு வியாகுல அன்னை ஆலய திருவிழா வருகிற 11–ந் தேதி தொடங்குகிறது.

அழகியமண்டபம்,

வில்லுக்குறி அருகே கொன்னக்குழிவிளையில் வியத்தகு வியாகுல அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா வருகிற 11–ந் தேதி தொடங்கி 20–ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளில் மாலை 6 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் மரிய அல்போன்ஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் பெனிட்டோ மறையுரை நிகழ்த்துகிறார்.

தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள்  நடக்கிறது. வருகிற 15–ந் தேதி காலை 8 மணிக்கு, முதல்திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது. மாலையில் மரியன்னையின் விண்ணேற்பு விழா, இந்திய சுதந்திர தினவிழா, வியாகுல அன்னை பள்ளிக்கூடம் கட்டிடம் திறப்பு விழா ஆகியவை நடக்கிறது.

வருகிற 17–ந் தேதி மாலையில் திருப்பலியும், தொடர்ந்து அன்பின் விருந்தும் நடைபெறும். 18–ந் தேதி மாலையில் அருட்பணியாளர் ஜார்ஜ் பொன்னையா தலைமையில் நடைபெறும் திருப்பலியில் அருட்பணியாளர் ஜெயக்குமார் மறையுரை நிகழ்த்துகிறார்.

தேர் பவனி

19–ந் தேதி மாலையில் ஆடம்பர ஆராதனையும், தொடர்ந்து இரவு 9 மணிக்கு வியத்தகு அன்னையின் தேர் பவனியும் நடக்கிறது.  20–ந் தேதி காலை 8 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு குழித்துறை மறைமாவட்ட பொருளாளர் அகஸ்டின் தலைமை தாங்குகிறார்.

மதியம் 2 மணிக்கு தேர் பவனி நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடி இறக்கம், நற்கருணை ஆசீர், மறைகல்வி மன்ற ஆண்டுவிழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை பிரான்சிஸ் சேவியர், பங்குபேரவை  உதவி தலைவர் அகஸ்டின் ஆன்டனி ராஜன், செயலாளர் மேரி ஸ்டெல்லா ராணி, உதவி செயலாளர் வியாகுல முத்து, பொருளாளர் சவுமியா மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.


Related Tags :
Next Story