தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்


தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Aug 2017 10:45 PM GMT (Updated: 8 Aug 2017 9:31 PM GMT)

தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்துடன் இணைந்த தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சாலையோர வியாபாரிகள் மீது மாநகராட்சியும், காவல் துறையும் அடக்குமுறையை கையாளக்கூடாது, சாலையோர டிபன் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்டப்படி நிபந்தனையில்லாமல் உரிமம் வழங்க வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல் முறைப்படி சாலையோர வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ரெங்கராஜன், செயலாளர் சம்பத் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். செல்வி, ராமர், புஷ்பாகரன் உள்பட தரைக்கடை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மணிகண்டன் நன்றி கூறினார். 

Next Story