புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
பெருமத்தூர் கிராமத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மங்களமேடு,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சு.ஆடுதுறையில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதையடுத்து இந்த மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்க அதிகாரிகள் பெருமத்தூர்-மிளகாநத்தம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனிநபருக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்தனர். பின்னர் அந்த இடத்தில் புதியதாக கட்டிடம் கட்டப்பட்டு நேற்று முன்தினம் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை அந்த டாஸ்மாக் கடையை திறக்க டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் ரமேஷ், உதவியாளர்கள் பரமசிவம், கணேசன் ஆகியோர் வந்திருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெருமத்தூர், மிளகாநத்தம் கிராம பொதுமக்கள் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக் கோரி, கடை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையடுத்து போலீசார், அதிகாரிகளிடம் கூறி, இந்த இடத்தில் டாஸ்மாக் கடையை திறக்க மாட்டோம் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story