போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி சிக்கினார்: ஆவணங்கள் தயாரிக்க உடந்தையாக இருந்த அரசு அதிகாரி கைது
சேலத்தில் போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி சிக்கியதையடுத்து, ஆவணங்கள் தயாரிக்க அவருக்கு உடந்தையாக இருந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி கைது செய்யப்பட்டார்.
சேலம்,
சேலம் கிச்சிப்பாளையம் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ஸ்ரீதர் (வயது 26). இவர் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ படித்தவர். இவர் கடந்த மாதம் 30-ந் தேதி, சேலம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜய்பாபுவை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது ஸ்ரீதர், “நான் திரிபுரா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி. தற்போது நான் தமிழக அரசின் பொதுத்துறை (ஆய்வு) தலைவர் மற்றும் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளேன். சேலத்தில் பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எனக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அறை ஒதுக்கித்தர வேண்டும்“ என்று கேட்டுள்ளார்.
அதற்கு விஜய்பாபு, ‘அரசின் முறையான கடிதத்துடன் வந்தால் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்‘ என்றார். மேலும் புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம் தொடர்பாக அவர், சென்னை தலைமை செயலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்தார். அப்போது அப்படி யாரும் நியமிக்கப்படவில்லை என பதில் வந்தது. எனவே, தன்னுடன் பேசியவர் போலி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருக்கலாம் என்பதை உறுதி செய்து கொண்டார். சரி... இனி எப்போதாவது பேசினால் ஸ்ரீதரை வரச்சொல்லி பிடிக்க திட்டமிட்டார்.
‘சல்யூட்’ அடித்து அழைத்து வந்த போலீசார்
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அரசு முத்திரை பதித்த போர்டு மாட்டி, சொகுசுகாரில் ஸ்ரீதர் சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தார். நுழைவாயிலில் அவரது கார் வந்ததும், அங்கு காவல்பணியில் இருந்த போலீசார் ஏதோ உயர் அதிகாரி வருகிறார் என எண்ணி அவருக்கு ‘சல்யூட்’ அடித்தனர். அவருடன் உதவியாளர் எனக்கூறி கொண்டு சேலம் வேம்படித்தாளத்தை சேர்ந்த ஞானசுந்தரம் (70) என்பவரும் வந்தார். இவர், சென்னையில் அரசு நெடுஞ்சாலைத்துறையில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஐ.ஏ.எஸ். அதிகாரி தோரணையில் வந்த ஸ்ரீதர், தனது இரு கைகளையும் பேண்ட் பாக்கெட்டுக்குள் விட்டவாறு எவ்வித பயமும் இன்றி வந்தார்.
நேராக கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறைக்கு சென்ற ஸ்ரீதருக்கு நாற்காலியில் அமரவைத்து தேனீர், பிஸ்கட் வழங்கப்பட்டது. அதே வேளையில் சேலம் மாநகர போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். ஸ்ரீதர் வைத்திருந்த உத்தரவை அதிகாரிகள் வாங்கி பார்த்தபோது அது போலியானது என கண்டறியப்பட்டது. வந்தவர் போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றதும் அவரை சேலம் டவுன் போலீசார் கைது செய்தனர்.
அதன் பின்னர் அவரை, கிச்சிப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. கிச்சிப்பாளையத்தில் அவர் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அதன் முன்பு “தமிழ்நாடு அரசின் பொதுத்துறை(ஆய்வு) தலைவர் மற்றும் இணை செயலாளர்” என்ற பெயர் பலகையோடு அலுவலகம் நடத்தி வந்தது தெரியவந்தது.
அங்கு அலுவலகத்தில் இருந்த பல்வேறு ஆவணங்களையும், கணினி உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்த போலீசார் அலுவலகம் முன்பு தொங்கவிடப்பட்ட பெயர் பலகையையும் எடுத்து சென்றனர். மேலும் தமிழ்நாடு அரசின் முத்திரையோடு பயன்படுத்தி வந்த சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பலமணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜாவைத்தியநாதன் கையொப்பம் கொண்ட பல்வேறு ஆவணங்கள் வைத்திருப்பதும், அரசின் இணைச்செயலாளர் என்ற பொறுப்புடன் பலருக்கு பணிஆணை வழங்கி இருப்பதும் தெரியவந்தது. ஸ்ரீதருக்கு கார் டிரைவராக இருந்தவருக்கும் பணி ஆணை வழங்கி வேலையில் சேர்த்ததுபோல போலியான ஆவணம் தயாரித்து கொடுத்தது தெரியவந்தது.
இந்த நிலையில் ஸ்ரீதருக்கு உதவியாளராக பணியாற்றி வந்த நெடுஞ்சாலைத்துறை ஓய்வுபெற்ற அதிகாரி ஞானசுந்தரம் நேற்று காலை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர், போலியான ஆவணங்களை தயாரித்து, அதை உண்மையான ஆவணங்கள்போல கையெழுத்திடுதல் உள்ளிட்டவைகளுக்கு ஸ்ரீதருக்கு உடந்தையாக செயல்பட்டதற்காக போலீசார் அவரை கைது செய்துள்ளனர். கைதான இருவரும் நேற்று காலை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஸ்ரீதர் ரூ.12 லட்சத்திற்கு சொகுசு கார் வாங்கி ஐ.ஏ.எஸ். அதிகாரிபோல பல நிறுவனங்களுக்கு ஆய்வு நடத்த சென்றதாகவும் கூறப்படுகிறது. அப்படி சென்றபோது, லஞ்சம் பெற்றாரா?, யார், யாரிடம் எவ்வளவு பணம் பெற்றுள்ளார்? என தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Tags :
Next Story