திருவேற்காட்டில் கூவம் ஆற்றில் மூட்டை கட்டி வீசப்படும் இறைச்சி கழிவுகள் பொதுமக்கள் புகார்
சென்னை திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பெருமாளகரம் பகுதியில் இறைச்சி கழிவுகளை மூட்டை, மூட்டையாக கட்டி கூவம் ஆற்றில் வீசி வருகிறார்கள். இதனால் அந்த பகுதி முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது.
பூந்தமல்லி,
இந்த பகுதியில் இறைச்சி கடை நடத்துபவர்கள் இறைச்சி கழிவுகளை அப்படியே மூட்டைகளில் கட்டி கூவத்தில் வீசி விட்டு செல்கிறார்கள். அந்த இறைச்சிகளை தின்பதற்காக ஆற்றுக்குள் இறங்கும் நாய்கள், சில நேரம் நீரில் மூழ்கி செத்து விடுகின்றன. மூட்டைகளில் உள்ள இறைச்சிகளை நாய்கள் வெளியே இழுத்து போட்டு விடுவதால் அவை தண்ணீரில் கலந்து அதிக துர்நாற்றம் வீசுகிறது. வீடுகள், தொழிற்சாலைகளில் இருந்து லாரிகளில் சேகரிக்கப்படும் கழிவு நீரும் இங்கு கொட்டப்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகளும், கூவத்தை ஒட்டி உள்ள வீடுகளில் வசிப்பவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அந்த பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. இறைச்சி கழிவுகளை கூவத்தில் கொட்டாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story