நெடுவாசலில் செடிகளை நட்டு பொதுமக்கள் போராட்டம்
வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12–ந்தேதி 2–வது கட்டமாக போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
வடகாடு,
வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12–ந்தேதி 2–வது கட்டமாக போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 120–வது நாளாக நேற்றும் போராட்டம் நடைபெற்றது. அதில், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து, நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தி பசுமையை அழித்துவிடவேண்டாம் என்பதை வலியுறுத்தி போராட்டக்களத்தில் செடிகளை நட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story