வேளாங்கண்ணி பேராலய திருவிழா: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. கீழை நாடுகளில் “லூர்து நகர்” என்ற பெருமையுடனும், கிறிஸ்தவ ஆலயத்திற்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய “பசிலிக்கா” என்ற பெருமைமிகு பிரம்மாண்ட கட்டிட அமைப்புடனும் இந்த ஆலயம் விளங்குகிறது.
வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள் செப்டம்பர் மாதம் 8-ந் தேதி ஆகும். இதையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் அன்னையின் பிறந்தநாள் 11 நாட்கள் திரு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டின் பேராலய ஆண்டுத்திருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவையொட்டி பேராலயத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மராத்தி, கொங்கனி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திருப்பலி நடைபெறும். இந்த ஆண்டு திருவிழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பேராலய திருவிழா தொடங்க உள்ளதையொட்டி திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை பேராலய நிர்வாகத்தினர் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பேராலயத்திற்கு வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், அலங்கார மின் விளக்குகள் அமைத்தல், அலங்கார வளைவுகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Tags :
Next Story