பாகேபள்ளி தாலுகாவில் பசுமாடுகளை திருடிய வாலிபர் சிக்கினார்


பாகேபள்ளி தாலுகாவில் பசுமாடுகளை திருடிய வாலிபர் சிக்கினார்
x
தினத்தந்தி 10 Aug 2017 3:38 AM IST (Updated: 10 Aug 2017 3:38 AM IST)
t-max-icont-min-icon

பாகேபள்ளி தாலுகாவில், பசுமாடுகளை திருடிய வாலிபரை கிராம மக்கள் பிடித்து தர்ம–அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

கோலார் தங்கவயல்,

பாகேபள்ளி தாலுகாவில், பசுமாடுகளை திருடிய வாலிபரை கிராம மக்கள் பிடித்து தர்ம–அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய வாலிபரின் கூட்டாளிகள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகா மே.கொள்ளப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பாரெட்டி. விவசாயி. இவர் சொந்தமாக 4 பசுமாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அந்த மாடுகளை, வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் கட்டி வைத்திருந்தார். நேற்று அதிகாலையில் அங்கு ஒரு சரக்கு ஆட்டோவில் வந்த 3 பேர், அந்த 4 பசுமாடுகளையும் திருடி ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு தப்ப முயன்றனர்.

இதைப்பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் ஆட்டோவை மடக்கினர். இதில் ஆட்டோவில் இருந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் பிடிபட்டார். பிடிபட்ட அவரை கல் தூணில் கட்டி வைத்து கிராம மக்கள் தர்ம–அடி கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் பாகேபள்ளி புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டம் கோரகுண்டா கிராமத்தைச் சேர்ந்த முகமது ரபீக் காசிம்(வயது 30) என்பதும், அவரும் அவருடைய கூட்டாளிகள் 2 பேரும் சேர்ந்து பல்வேறு இடங்களில் மாடுகளை திருடி விற்று வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் முகமது ரபீக் காசிமை கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு சரக்கு ஆட்டோ, 4 பசுமாடுகள் ஆகியவற்றை மீட்டனர். மேலும் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story