விஜயாப்புராவில் தேசிய நீர் மாநாடு மந்திரி எம்.பி.பட்டீல் தகவல்


விஜயாப்புராவில் தேசிய நீர் மாநாடு மந்திரி எம்.பி.பட்டீல் தகவல்
x
தினத்தந்தி 10 Aug 2017 3:51 AM IST (Updated: 10 Aug 2017 3:50 AM IST)
t-max-icont-min-icon

விஜயாப்புராவில் தேசிய நீர் மாநாடு 16–ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்க உள்ளதாக மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.

பெங்களுரு,

நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

உலக வானிலை மாற்றத்தால் மழை பெய்வது குறைந்து நாட்டில் பல மாநிலங்கள் வறட்சியால் பாதிக்கப்படுகிறது. நீர் ஆதாரங்கள் குறைந்து வருகின்றன. இதுகுறித்து விவாதிக்க தேசிய நீர் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு விஜயாப்புராவில் வருகிற 16–ந் தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

ராஜஸ்தான் நீர் மனிதர் ராஜேந்திரசிங் தலைமையில் இந்த மாநாடு நடக்கிறது. நீர் ஆதாரங்களை பாதுகாப்பது தொடர்பான விவாதங்கள், நீர் சேகரிப்பு குறித்த கருத்தரங்குகள், நீர் ஆதாரங்களை நிர்வகிப்பது தொடர்பான ஆலோசனைகள் இந்த மாநாட்டில் நடைபெறும். இந்த மாநாடு டெல்லியில் நடத்த திட்டமிடப்பட்டது. அது தற்போது விஜயாப்புராவுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நாட்டில் நீர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

இந்த மாநாட்டில் பிரபல சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உள்பட நாடு முழுவதும் இருந்து முற்போக்கு சிந்தனையாளர்கள் 500–க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டை முதல்–மந்திரி சித்தராமையா தொடங்கி வைக்கிறார். இந்த மாநாடு மூலம் இந்தியா உள்பட சர்வதேச நாடுகளுக்கு ஒரு நல்ல செய்தி அனுப்பப்படும்.

இவ்வாறு எம்.பி.பட்டீல் கூறினார்.


Next Story