சங்கராபரணி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு


சங்கராபரணி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு
x
தினத்தந்தி 10 Aug 2017 4:09 AM IST (Updated: 10 Aug 2017 4:09 AM IST)
t-max-icont-min-icon

புதுவை செம்பியம்பாளையத்தை சேர்ந்தவர் கலியன். இவருடைய மகன் விஜய் (வயது 21) மதகடிப்பட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4–ம் ஆண்டு படித்து வந்தார்.

கண்டமங்கலம்,

இவருடைய நண்பர்கள் பாலா, விக்னேஷ், கமலக்கண்ணன் ஆகியோர் அதே கல்லூரியில் படிக்கின்றனர். தனது பிறந்த நாளை நேற்று பாலா நண்பர்களுடன் கொண்டாடினார்.

அப்போது வில்லியனூர் அருகே உள்ள சங்கராபரணி ஆற்றில் குளிக்கச் சென்றனர். ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்தபோது விஜய் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக தெரிகிறது. நீண்ட நேரமாகியும் விஜயை காணாததால் அவருடைய நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆற்றில் ஆழமான பகுதியில் மூழ்கிய விஜயை மீட்டு வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் விஜய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அப்போது அங்கிருந்த அவருடைய நண்பர்கள் கதறி அழுதனர். இது குறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story