தூத்துக்குடியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


தூத்துக்குடியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 Aug 2017 2:30 AM IST (Updated: 10 Aug 2017 6:05 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

தூத்துக்குடி கே.வி.கே. நகர் மெயின் பகுதியில் கடந்த சில வாரங்களாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை. அப்படியே வினியோகம் செய்தாலும் 1 மணி நேரம் மட்டுமே தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த தண்ணீர் தட்டுப்பாட்டால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள், நேற்று காலையில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய கோரி, கே.வி.கே. நகர் மெயின் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சு வார்த்தை

இதனை அறிந்த தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர், மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையர் சரவணன் மற்றும் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையின் போது, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், தங்கள் பகுதிக்கு தினமும் குறைந்தது 3 மணி நேரம் தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு அதிகாரிகள் தேவையான குடிநீர் வழங்கப்படும் என்று கூறினார்.

இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story