திருவள்ளுவர் சிலையை காகித கூழ் மூலம் சுத்தம் செய்யும் பணி


திருவள்ளுவர் சிலையை காகித கூழ் மூலம் சுத்தம் செய்யும் பணி
x
தினத்தந்தி 11 Aug 2017 4:00 AM IST (Updated: 10 Aug 2017 11:20 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை காகித கூழ் மூலம் சுத்தம் செய்யும் பணி

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு அருகே உள்ள பாறையில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை உப்பு காற்றினால் சேதமடைவதை தடுக்க 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு ரசாயன கலவை பூசும் பணி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. இதற்காக சிலையை சுற்றிலும் இரும்பு கம்பியால் சாரம் அமைத்து, இணைப்புகளில் உள்ள சிமெண்டு கலவை அகற்றப்பட்டு புதிய கலவை பூசப்பட்டது.

அடுத்த கட்டமாக சிலையில் படிந்துள்ள உப்பு தன்மையை காகித கூழ் மூலம் அகற்றி சுத்தம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியை காரைக்குடி மைய மின்வேதியியல் ஆய்வக தலைமை விஞ்ஞானி செய்யது அசீம், தமிழ்நாடு தொல்லியல் ஆய்வக செயற்பொறியாளர் தங்கவேல், முதன்மை விஞ்ஞானி மனோகரன் உள்பட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் பார்வையிட்டனர். அவர்களுடன் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக உதவி செயற்பொறியாளர் பால் ஜெபஞானதாஸ், மேலாளர் ஜாக்சன் வில்லியம் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story