பலத்த மழையால் மேலும் 7 வீடுகளில் விரிசல் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.எல்.ஏ. நிவாரண உதவிகள் வழங்கினார்


பலத்த மழையால் மேலும் 7 வீடுகளில் விரிசல் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.எல்.ஏ. நிவாரண உதவிகள் வழங்கினார்
x
தினத்தந்தி 11 Aug 2017 4:15 AM IST (Updated: 11 Aug 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் பெய்த பலத்த மழையால் மேலும் 7 வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெங்கசாமி எம்.எல்.ஏ. நிவாரண உதவிகளை வழங்கினார்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் கோடை காலம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

தஞ்சை மாவட்டத்திலும் நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை பலத்த மழை கொட்டியது. இதனால் எங்கு பார்த்தாலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தஞ்சையில் டி.பி.எஸ். நகர், பொன்னகர் வாரி, சீனிவாசபுரம் உள்ளிட்ட இடங்களில் 7 வீடுகள் இடிந்து விழுந்தன.

7 வீடுகளில் விரிசல்

மேலும் பொன்னகர் வாரி பகுதியில் வசித்துவரும் பொன்னுத்தாய், பாப்பாத்தி, அமுது, தாமரைச்செல்வி, ராசாத்தி, மல்லிகா உள்ளிட்ட 7 பேரின் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில் வீடு இடிந்து பாதிக்கப்பட்ட டி.பி.எஸ்.நகர், பொன்னகர் வாரியை சேர்ந்த 4 பேரின் குடும்பங்களுக்கு அரசின் சார்பில் ரூ.4,100, 5 கிலோ அரிசி, வேட்டி- சேலை ஆகிய நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இதனை தஞ்சை தொகுதி எம்.எல்.ஏ. ரெங்கசாமி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார். வீடு இடிந்த 4 பேரின் குடும்பத்திற்கும், விரிசல் ஏற்பட்ட வீடுகளை சேர்ந்தவர்களுக்கும் ரெங்கசாமி எம்.எல்.ஏ. தனது சொந்த பணத்தில் இருந்தும் நிதி உதவியை வழங்கினார்.

அப்போது தஞ்சை மருத்துவகல்லூரி பகுதி அ.தி.மு.க. செயலாளர் சரவணன், வார்டு செயலாளர்கள் தங்கம், சிவக்குமார், அ.தி.மு.க. நிர்வாகிகள் நண்பா.சரவணன், வெங்கடேஷ், தஞ்சை தாசில்தார் தங்க.பிரபாகரன், மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் உடன் இருந்தனர். 

Related Tags :
Next Story