நெடுவாசலில் பொது மக்கள் நூதன போராட்டம்


நெடுவாசலில் பொது மக்கள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 11 Aug 2017 4:15 AM IST (Updated: 11 Aug 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

நெடுவாசலில் பொது மக்கள் நூதன போராட்டம்

வடகாடு,

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதை கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி 2-ம் கட்ட போராட்டத்தை தொடங்கினர். அதில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்கள் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 121-வது நாளாக நேற்றும் போராட்டம் நடைபெற்றது. அதில், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து கதிராமங்கலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மாசுகலந்த குடிநீரை மத்திய, மாநில அரசுகள் என பதாகை மாட்டிக்கொண்ட நபர்களிடம் குடிக்க சொல்லி கொடுப்பதுபோலவும், அதை குடிக்காமல் அவர்கள் அங்கிருந்து ஓடுவதுபோலவும் சித்தரித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Related Tags :
Next Story