நவிமும்பை போக்குவரத்து கழகத்துக்கு ரூ.10 லட்சம் கூடுதல் வருமானம்
பெஸ்ட்பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்த நாளில், நவிமும்பை போக்குவரத்து கழகத்துக்கு ரூ.10 லட்சம் கூடுதல் வருமானம் கிடைத்தது.
மும்பை,
இந்தநிலையில், கடந்த 7–ந்தேதி அன்று மும்பையில் பெஸ்ட்பஸ் ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர். இதன் காரணமாக மும்பை– நவிமும்பை இடையே இயக்கப்படும் பெஸ்ட் பஸ் சேவை முடங்கியது.
இதன் காரணமாக பயணிகளின் போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு நவிமும்பை மாநகராட்சி போக்குவரத்து கழகம் நவிமும்பை– மும்பை வழித்தடங்களில் கூடுதல் பஸ் சேவைகளை இயக்கியது. அந்த பஸ்களில் அதிகளவில் பயணிகள் பயணம் செய்தனர்.இதன் காரணமாக அந்த ஒரு நாளில் மட்டும் நவிமும்பை மாநகராட்சி போக்குவரத்து கழகத்திற்கு வழக்கமான வருமானத்தை விட கூடுதலாக ரூ.10 லட்சம் வருமானம் கிடைத்து உள்ளது.
இந்த தகவலை நவிமும்பை மாநகராட்சி போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story