மேலூரில், தினகரன் பங்கேற்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்துக்கு அனுமதி


மேலூரில், தினகரன் பங்கேற்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்துக்கு அனுமதி
x
தினத்தந்தி 11 Aug 2017 10:30 PM GMT (Updated: 11 Aug 2017 8:09 PM GMT)

மேலூரில், டி.டி.வி. தினகரன் பங்கேற்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்குமாறு, போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

அ.தி.மு.க. அம்மா அணியின் மேலூர் நகரச்செயலாளர் சரவணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது-

வருகிற 14-ந்தேதி (திங்கட் கிழமை) மேலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. இந்த பொதுக்கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் கலந்து கொள்கிறார்.

எனவே பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கக்கோரி போலீசாரிடம் மனு கொடுத்தோம். ஆனால் அந்த மனு மீது போலீசார் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. ஒருவேளை கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டால், அது விடுமுறை நாள் என்பதால், நீதிமன்றத்தை அணுகுவது இயலாத ஒன்றாகி விடும். எனவே பொதுக்கூட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சுந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில் மனுதாரர் நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்கவும், போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Next Story