தண்ணீர் வெளியேறாதவாறு மண் மூட்டைகளை கொண்டு விவசாயிகள் அடைத்தனர்
பாப்பக்காப்பட்டி பெரிய ஏரியில் பழுதான மதகுகளால் தண்ணீர் வெளியேறாதவாறு மண் மூட்டைகளை கொண்டு விவசாயிகள் அடைத்தனர்.
தோகைமலை,
இது குறித்து மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மதகுகளை சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏரி
கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி அருகே உள்ள பாப்பக்காப்பட்டி ஊராட்சியில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 190 ஏக்கர் பரப்பளவில் பாப்பக்காப்பட்டி பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை காலங்களில் சேகரிக்கப்படும் தண்ணீர் 2 மதகுகள் மூலம் மலையாண்டிபட்டி, பாப்பக்காப்பட்டி, பாப்பக்காப்பட்டி காலனி பகுதிகளில் உள்ள சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தன. மேலும் இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பினால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணற்று பாசனம் மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்கு உதவும். இந்த ஏரி கடந்த 2010-ம் ஆண்டு நிரம்பியது. அதன்பின்னர் மழையில்லாமல் இந்த ஏரி இதுநாள் வரை நிரம்பவில்லை. இதனால் இந்த பகுதியில் அதிகமான வறட்சி ஏற்பட்டு குடிநீருக்கே பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
மதகுகள் பழுது
இந்நிலையில் பாப்பக்காப்பட்டி ஏரியின் கரையில் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் 2 மதகுகள் பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி பழுதடைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பாப்பக்காப்பட்டி ஏரிக்கு தண்ணீர் வரும் நீர்பிடிப்பு பகுதியில் அதிகமான மழை பெய்தது. இதனால் பாப்பக்காப்பட்டி ஏரிக்கு மழைநீர் வரும் வரத்து வாரியின் மூலம் ஏரியின் கொள்ளளவில் 4-ல் ஒரு பங்கு அளவு(கால் பங்கு) ஏரிக்கு தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் மதகுகள் ஏற்கனவே பழுதடைந்து இருந்ததால் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறி வீணாகி வந்தது.
விவசாயிகள் கோரிக்கை
இதை அறிந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கற்களையும், மண் மூட்டைகளையும் கொண்டு தண்ணீர் வெளியேறி வந்த மதகுகளை அடைத்தனர். இதனால் வீணாகி வந்த தண்ணீர் தற்காலிகமாக தடுக்கப்பட்டு உள்ளது. மேலும் மழை பெய்து ஏரிக்கு தண்ணீர் வந்தால் ஏரியில் பொதுமக்கள் தற்காலிகமாக அடைத்து வைத்துள்ள மண் மூட்டைகள் கரைந்து ஏரியில் உள்ள அனைத்து தண்ணீரும் வீணாக வெளியேறும் நிலை ஏற்படும். இதனால் பாப்பக்காப்பட்டி ஏரியின் மதகுகளை சரிசெய்து தண்ணீரை சேமிக்க மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story