அமிர்தியில் மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்


அமிர்தியில் மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Aug 2017 4:32 AM IST (Updated: 12 Aug 2017 4:31 AM IST)
t-max-icont-min-icon

வேலூரை அடுத்த அமிர்தி பஸ் நிலையம் அருகே நேற்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கணியம்பாடி,

வேலூரை அடுத்த அமிர்தி பஸ் நிலையம் அருகே நேற்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொது செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் பலாம்பட்டு மலை கிராமத்தில் 3 தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் மலைவாழ் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அமிர்தி வனச்சரகர் மற்றும் வன ஊழியர்களை கண்டித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர்.


Next Story