தூத்துக்குடியில் அனைத்து கட்சி கூட்டம் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
தூத்துக்குடியில் அனைத்து கட்சி கூட்டம் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் அனைத்து கட்சி கூட்டம் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
ஆர்ப்பாட்டம்இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கம் சார்பில் மத்திய, மாநில அரசுகளின் விவசாய விரோத போக்கை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரியும், தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும் வருகிற 16–ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினர் கலந்து கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
ஆலோசனை கூட்டம்அதன்படி, விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்வது குறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அனைத்து கட்சியினருடனான ஆலோசனை கூட்டம், தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நேற்று மாலை நடந்தது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில், தூத்துக்குடி–பாளையங்கோட்டை ரோடு சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே வருகிற 16–ந்தேதி காலை 10 மணிக்கு நடக்கும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில், அனைத்து கட்சியினர் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கணேசன், கோட்டு ராஜா, மாவட்ட விவசாயி அணி அமைப்பாளர் ராமர், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் இளையபெருமாள், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அழகுமுத்துபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சங்கரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கணேசன், மகேந்திரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் யூசப், பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் தர்மராஜ், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் கிதர் பிஸ்மி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.