தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எம்.எல்.ஏ. - அதிகாரிகள் நேரில் ஆய்வு
பழைய தர்மபுரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் புதிய மேம்பாலம் அமைப்பது தொடர்பாக பி.பழனியப்பன் எம்.எல்.ஏ. மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
தர்மபுரி,
தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பழைய தர்மபுரி அருகே முத்துப்பட்டி பிரிவு சாலை பகுதியில் புதிய மேம்பாலம் கட்ட வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பஸ், லாரி உரிமையாளர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்த பகுதியில் உள்ள முத்துப்பட்டி, கே.நடுஅள்ளி, கடகத்தூர், நாகரசம்பட்டி, கொளகத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சவுளூர் மேம்பாலம் வழியாகவே தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர வேண்டிய நிலை உள்ளது.
குண்டல்பட்டி பகுதியில் பல்வேறு கல்லூரிகள் செயல்படுவதால் தினமும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் இந்த பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் ஒருபகுதியில் இருந்து மற்றொரு பகுதியை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன்காரணமாக இந்த பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் விபத்துகளை தடுக்கவும், பொதுமக்களின் போக்குவரத்தை எளிமைபடுத்தவும் அந்த பகுதியில் புதிய மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், பி.பழனியப்பன் எம்.எல்.ஏ., தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆலோசகர் அழகிரி, தொப்பூர் சுங்கச்சாவடி மேலாளர் துரை ஆகியோர் நேற்று பழைய தர்மபுரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் முத்துப்பட்டி சாலை பிரியும் பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள். சவுளூர் மேம்பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைப்பது தொடர்பாகவும் அப்போது ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வின்போது முன்னாள் பால்வளத்தலைவர் டி.கே.ராஜேந்திரன், ஆவின் துணைத்தலைவர் பெரியசாமி, ஒன்றியசெயலாளர் பாஸ்கர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கந்தசாமி, செல்வராஜ், மணிவண்ணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story