விநாயகர் சிலைகள் வைப்பது குறித்த ஆலோசனை கூட்டம்


விநாயகர் சிலைகள் வைப்பது குறித்த ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 13 Aug 2017 4:15 AM IST (Updated: 13 Aug 2017 2:38 AM IST)
t-max-icont-min-icon

மத்தூரில் விநாயகர் சிலைகள் வைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

மத்தூர்,

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பக்தர்கள் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதையொட்டி மத்தூரில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்களுடன் விநாயகர் சிலை வைப்பது, கரைப்பது, பாதுகாப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

மத்தூரில் தர்மபுரி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சுனன் தலைமை தாங்கி பேசியதாவது:-

முன்அனுமதி பெற வேண்டும்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கக்கூடிய சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளாக இருக்க வேண்டும். ரசாயன கலவையால் தயாரிக்கப்பட்ட சிலைகளை வைக்கக்கூடாது. மேலும் சிலைகளை வைப்பவர்களே கமிட்டி அமைத்து அவற்றை பாதுகாக்க வேண்டும். மேலும் சிலை அருகில் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும். சிலைகள் வைத்து வழிபட காவல்துறையிடம் முன்அனுமதி பெற வேண்டும். காவல் துறையினர் அறிவிக்கும் நாட்களில் விநாயகர் சிலைகளை கரைத்திட வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை அமைதியாக நடத்தி தர காவல்துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமஆண்டவர் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் மத்தூர் போலீஸ் நிலைய தனிப்பிரிவு ஏட்டு மகாலிங்கம் நன்றி கூறினார். 

Related Tags :
Next Story