வீடுகளில் புகுந்து நகை- வெள்ளி பொருட்கள் திருட்டு


வீடுகளில் புகுந்து நகை- வெள்ளி பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 13 Aug 2017 3:45 AM IST (Updated: 13 Aug 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே வீடுகளில் புகுந்து நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிய சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே கோழிகுத்தி கிராமம் மெயின்ரோட்டை சேர்ந்த முத்துக்குமாரசாமி மனைவி விஜயா (வயது 55). இவர், தனது மகள் வீட்டுக்கு குடும்பத்தினருடன் திருச்சிக்கு சென்றுவிட்டு நேற்று காலை அவரது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்புற கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு, கதவு மூடிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த துணிகள் கலைந்து கீழே கிடந்தன. மேலும், பீரோக்களில் இருந்த தோடு, வளையல் உள்ளிட்ட 4 பவுன் நகைகள் மர்ம நபர்களால் திருடப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.75 ஆயிரம் என கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும், சம்பவம் தொடர்பாக விஜயா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து பூட்டை உடைத்து நகையை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதேபோல் மயிலாடுதுறை அருகே ஆனந்தக்குடி கலைஞர் நகரை சேர்ந்தவர் காளிதாஸ் (50). இவர், சம்பவத்தன்று தனது மகள் வீட்டிற்கு குடும்பத்தினருடன் சிதம்பரத்திற்கு சென்றுவிட்டு, அவரது வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 600 கிராம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Related Tags :
Next Story