தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் 108 பேர் மீது வழக்கு


தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் 108 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 13 Aug 2017 3:45 AM IST (Updated: 13 Aug 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் 108 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொத்தமங்கலம், விளக்குடி, மேட்டுப்பாளையம், கீரக்கல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் 1,544 பேர் பயிர்க் காப்பீடு செய்திருந்தனர். இதில் 1,238 பேருக்கு பயிர்க் காப்பீட்டு தொகை கிடைத்துள்ளது. மீதி 300-க்கும் மேற்பட்ட கொத்தமங்கலம் மற்றும் விளக்குடி பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு குறைவான பணமே வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அரசு அறிவித்த முழு பயிர்க் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என கூறி மேட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி போலீசார் அனுமதியின்றி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி விவசாயிகள் சங்க விளக்குடி கிளை தலைவர் விவேகானந்தன், விளக்குடியை சேர்ந்த பாஸ்கர் (வயது 50), கருணாநிதி (58), சண்முகம் (47), செல்வம் (45) உள்பட 108 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Related Tags :
Next Story