தீயில் எரிந்து கூரை வீடு சாம்பல் ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்


தீயில் எரிந்து கூரை வீடு சாம்பல் ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 13 Aug 2017 3:45 AM IST (Updated: 13 Aug 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி அருகே தீயில் எரிந்து கூரை வீடு சாம்பலானது. இதனால் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொற்கை உலகாட்சிகாடு உப்புக்குள தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 35). இவருடைய கூரை வீடு நேற்று காலை மின்கசிவால் தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர் தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது உலகாட்சிகாடு அருகில் வரும்போது சாலை மோசமாக இருந்ததால் சேற்றில் தீயணைப்பு வாகனம் சிக்கியது. இதனால் தீயணைப்பு வாகனம் அங்கு செல்ல காலதாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில் குடிசை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது.

ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்

இதில் வீட்டில் இருந்த பீரோ, கிரைண்டர், மிக்சி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இதன் சேதமதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் ஆகியோர் விசாரணை செய்து வருகின்றனர். 

Related Tags :
Next Story