குடிநீர் வசதி கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை


குடிநீர் வசதி கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 13 Aug 2017 4:30 AM IST (Updated: 13 Aug 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் வசதி கோரி வெள்ளப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலி குடங்களுடன் பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விராலிபட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தரகம்பட்டி,

கரூர் மாவட்டம் வெள்ளப் பட்டி ஊராட்சி பொன்னிப் பட்டியில் பொதுமக்கள் ஏராளமானோர் வசித்து வரு கின்றனர். இங்கு 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதற்கு மூன்று ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன. இந்த மூன்று கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடிய வில்லை. மேலும் கடந்த 6 மாதமாக இந்த பகுதியில் காவிரி தண்ணீரும் கிடைக்க வில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் தட்டுப் பாட்டால் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் குடிநீர் வசதி கோரி அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் வெள்ளப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத் தை நேற்று முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் ஆழ்குழாய் கிணறுகளை மேலும் ஆழப்படுத்தி குடிநீர் வினியோ கம் செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென் றனர்.

இதேபோல் மேலப்பகுதி ஊராட்சி விராலிபட்டியில் குடிநீர் வசதிகோரி அப்பகுதி பொதுமக்கள் காலி குடங் களுடன் விராலிபட்டி- வீரணம்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அதிகாரி மனோகரன் விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், அப்பகுதியில் ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து லாரிகளில் குடிநீர் கொண்டு வரப்பட்டு வினியோகிக்கப் பட்டது. மேலும் அந்த பகுதி யில் புதிதாக ஒரு ஆழ்குழாய் கிணறு அமைத்து தருவதாக வும் உறுதி அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து பொது மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Related Tags :
Next Story