குடிநீர் தட்டுப்பாடு: காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


குடிநீர் தட்டுப்பாடு: காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 13 Aug 2017 4:15 AM IST (Updated: 13 Aug 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

மாயனூரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணராயபுரம்,

கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் மாயனூர் புதுத்தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த ஆறு மாத காலமாக சரி வர குடிநீர் வினியோகம் இல்லை. இதையடுத்து குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். குடிநீருக்காக பக்கத்து கிராமங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மாயனூரில் ரெயில்வே கேட் அருகே கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீசார் மற்றும் ஊராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Related Tags :
Next Story