கடலுக்குள் சூறாவளி காற்று; மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
குளச்சலில் கடலுக்குள் சூறாவளி காற்று வீசியதால் கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
குளச்சல்,
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300–க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், 600–க்கும் மேற்பட்ட கட்டுமரங்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளன.
இதில் விசைப்படகுகள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றுவிடும். விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றுவிட்டு சுமார் 10 முதல் 15 நாட்கள் கழித்து கரை திரும்புவார்கள். ஆனால் கட்டுமர மீனவர்கள் அதிகாலை 3 மணியளவில் கடலுக்கு சென்றுவிட்டு பகல் 10 மணிக்கு கரை திரும்புவார்கள்.
இவர்கள் பிடித்து வரும் மீன்களை உள்ளூர் வியாபாரிகள் வாங்கி செல்வது வழக்கம். ஆனால் கடந்த 2 நாட்களாக குளச்சல் கடலுக்குள் பயங்கர சூறாவளி காற்று வீசுகிறது.
இதனால் நேற்றுமுன்தினம் குளச்சல் கடற்கரையில் இருந்து குறைந்த அளவே கட்டுமரங்கள் கடலுக்கு சென்றது. அவர்களும் கடலில் வீசிய பலத்த காற்று காரணமாக அவசரமாக கரை திரும்பினர்.
நேற்று காலையிலும் கடலில் சூறாவளி காற்று வீசியது. இதனால் நேற்று அதிகாலையில் கடலுக்கு செல்ல வந்த கட்டுமர மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வீடு திரும்பினர்.
பெரும்பாலான கட்டுமரபடகுகள் கடலுக்கு செல்லாததால் அவை அனைத்தும் கரையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. இதனால், சந்தையில் மீன் வரத்து குறைந்தது.

Related Tags :
Next Story