முழு கடன் தள்ளுபடி அறிவிக்காவிட்டால் மந்திரிகளை கொடி ஏற்ற விடமாட்டோம்


முழு கடன் தள்ளுபடி அறிவிக்காவிட்டால் மந்திரிகளை கொடி ஏற்ற விடமாட்டோம்
x
தினத்தந்தி 12 Aug 2017 9:39 PM GMT (Updated: 12 Aug 2017 9:39 PM GMT)

முழு கடன் தள்ளுபடி அறிவிக்காவிட்டால் மாவட்ட தலைமையகங்களில் மந்திரிகளை கொடி ஏற்ற விடமாட்டோம் என விவசாய அமைப்பு தலைவர் தெரிவித்துள்ளார்.

மும்பை,

கடன் தொல்லையாலும், தொடர் வறுமையாலும் தவித்த விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டபோது கூட அரசு பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கவில்லை. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் விவசாயிகள் கடும் போராட்டத்தில் குதித்தனர். நகர் புறங்களுக்கு கொண்டுசெல்லப்படும் காய், கறிகள், பால் போன்ற பொருட்களை தடுத்து நிறுத்தி சாலையில் கொட்டி வீணடித்தனர்.

இதனால் கடும் நெருக்கடிக்குள்ளான பா.ஜனதா அரசு கடந்த 34 ஆயிரம் கோடி பயிர்க்கடன் தள்ளுபடி அறிவித்தது. இதன்மூலம் 89 லட்சம் விவசாயிகள் பயன் பேறுவார்கள் என தெரிவித்திருந்தது.

இருப்பினும் இந்த பயிர்க்கடனால் எந்த பயனும் ஏற்படவில்லை என கட்சிகளும், விவசாய அமைப்புகளும் தெரிவித்து வருகின்றனர். நிபந்தனையற்ற முழு பயிர்க்கடன் தள்ளுபடி வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிபந்தனை தற்போது வலுப்பெற்று வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி தற்போது விவசாய அமைப்புகள் புதிய போராட்டத்தை அறிவித்துள்ளன. ஆதாவது வரும் 15–ந் தேதிக்குள் மாநில அரசு முழு பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பதில் அரசு தோல்வி அடைந்து விட்டால், மாவட்ட தலைமையகத்தில் பொறுப்பு மந்திரிகளை கொடி ஏற்றிவைக்க அனுமதிக்க மாட்டோம். என தெரிவித்துள்ளன.

வரும் 15–ந் சுதந்திர தினம் கொண்டாடப்படவிருக்கும் வேலையில் விவசாய அமைப்புகளின் இந்த அறிவிப்பு ஆளும் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story